மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரொமாண்டிக்காக கொஞ்சி விளையாடி கிறிஸ்துமஸ் கொண்டாடும் கீர்த்தி - அசோக் செல்வன் ஜோடி.. வைரல் கிளிக்ஸ் உள்ளே..!
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக இருந்து வந்தவர் அசோக் செல்வன். சூது கவ்வும் திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கென தனி வரவேற்பு இருந்து வந்ததை தொடர்ந்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்தார்.
கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் ஆறு படங்களில் அவர் நடித்தாலும், எதுவும் குறிப்பிடம் அளவு வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகிய போர்தொழில் திரைப்படம் எதிர்பாராத அளவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
தற்போது அவரின் நடிப்பில் சபாநாயகன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. அடுத்தபடியாக அவர் ரஞ்சித் இயக்கத்தில் நடித்திருந்த நீல நட்சத்திரம் திரைப்படம் வெளியாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பிரபல தமிழ் நடிகையான கீர்த்தி பாண்டியனை இவர் திருமணம் செய்தார். தற்போது இருவரும் சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இருவரும் தங்களின் அன்பை பகிர்ந்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.