மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை அசின் - ரசிகர்கள் உற்சாகம்!
தமிழில் எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அசின். அதனை தொடர்ந்து அவர் உள்ளம் கேட்குமே, சிவகாசி, கஜினி,வேல் என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.பின்னர் அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவாகி, படவாய்ப்புகள் குவிந்தது.
பின் பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கிய அங்கும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். பின்னர் 2016 ஆண்டு, மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் முழுமையாக திரையுலகை விட்டு விலகினார்.
இந்நிலையில் விரைவில் அசின் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.