மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அசுரன் படத்தை பார்த்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பரப்பவர் நடிகர் தனுஷ். இவர் கடைசியாக நடித்த வடசென்னை படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகிய இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது அசுரன் படத்தை பார்த்து விட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதாவது அசுரன் படம் உண்மை நிலவரங்களை ஆணித்தரமாக அப்படியே கூறியுள்ளது என்று பாராட்டியுள்ளார்.
Asuran...raw real and intense... Cinema at its best👌Congratulations @dhanushkraja @VetriMaaran @prakashraaj @gvprakash @theVcreations @VelrajR and entire team #Asuran
— Mahesh Babu (@urstrulyMahesh) October 20, 2019