மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகன் பிறந்த அதிர்ஷ்டம்.! சொகுசு பங்களா வாங்கிய இயக்குனர் அட்லீ! அதுவும் எங்கு? எவ்வளவுக்கு தெரியுமா??
தமிழ் சினிமாவில் ராஜாராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து அவர் மெர்சல், தெறி, பிகில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி சினிமாதுறையில் தனக்கான ஒரு தக்க இடத்தை பிடித்தார். அவர் தற்போது ஷாருக்கான் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அட்லீ கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் தங்கள் குழந்தைக்கு மீர் என பெயரிட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தனர்.
மகன் பிறந்துள்ள இந்த சமயத்தில் இயக்குனர் அட்லீ மும்பையில் சொந்தமாக சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பங்களாவின் மதிப்பு ரூ.38 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அவர் இனி பெருமளவில் பாலிவுட் படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.