#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? வெளியான அசத்தல் தகவல்.!
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இதைத் தொடர்ந்து இவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக. உருவெடுத்துள்ளார்.
சமீபத்தில் இவருடைய இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. மேலும் உலக அளவில் 900 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் அட்லி அடுத்ததாக யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.