திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"குடும்பத்துடன் பாலிவுட்டில் செட்டிலாகும் அட்லீ!" அலுவலகம் திறந்துள்ளதாகத் தகவல்!
இயக்குனர் ஷங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இதையடுத்து 2013ம் ஆண்டு "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதற்கு முன்பே அட்லீ "முகப்புத்தகம்" என்ற குறும்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் அட்லீ. மேலும் கமலஹாசனை வைத்து "விக்ரம்" படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்துள்ளன.
தற்போது தமிழின் முன்னணி இயக்குனராக உள்ள அட்லீ, சமீபத்தில் ஷாருக்கானை வைத்து "ஜவான்" திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் உலகளவில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தற்போது "தெறி" படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார் அட்லீ.
ஏற்கனவே மும்பையில் வீடு வாங்கிய அட்லீ, தற்போது அங்கு 40கோடி மதிப்பில் அலுவலகம் ஒன்றையும் வாங்கியுள்ளார். இதையடுத்து அவர் தொடர்ந்து பாலிவுட்டில் படங்கள் இயக்கவுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. பாலிவுட்டில் மேலும் சில ஹீரோக்களிடமும் கதை சொல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.