திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திரைப்படங்களை காப்பி அடிக்கும் அட்லி.? தன் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி..
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ. இயக்குனர் ஷங்கருடன் உதவி இயக்குனராக இருந்த இவர், 2013ம் ஆண்டு "ராஜா ராணி" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் அட்லீ. சமீபத்தில் இவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய "ஜவான்" படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இவர் இயக்கிய 5 படங்களுமே வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளன.
இந்நிலையில், சம்பீத்தில் ஒரு பேட்டியில் அட்லீ, " என்னுடைய படங்கள் ஏற்கனவே பார்த்த சாயலில் உள்ளது என்ற விமர்சனம் தான் என்மீது எப்போதும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் எனக்கு கமர்ஷியல் சினிமாவில் தான் நம்பிக்கை உள்ளது.
பிரம்மாண்டமான திரைக்கதையில் நம்பிக்கை கொண்டுள்ளதால், இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். அதேசமயம் படம் பார்க்க வரும் மக்களை மகிழ்விப்பதும் என் நோக்கம். இது தான் என் படங்களின் வெற்றிக்கு காரணம்" என்று அட்லீ கூறியுள்ளார்.