கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
கொடுக்கும் பணத்திற்கும், செலவிடும் நேரத்திற்கும் ஒர்த்தா? ‘ஜுங்கா’ பற்றி ரசிகர்கள் கூறும் கருத்து என்ன?

விஜய் சேதுபதி தன் சொந்த தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில், கஞ்ச டானாக நடித்துள்ள ஜுங்கா திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனது ஒவ்வொரு படத்திலும் தனது தனித் திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் விஜய் சேதுபதி. இந்த படத்தின் டீசரே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
"படத்தை மறுபடியும் மறுபடியும் பார்க்கலாம். கொடுக்கும் பணத்திற்கும், செலவிடும் நேரத்திற்கும் ஒர்த்தான படம். இந்த படத்தை விஜய் சேதுபதியே தயாரித்துள்ளது ஆச்சரியமில்லை. டைலாக்குகள் தாறுமாறு. கவலைகளை மறந்து சந்தோஷமாக படம் பார்க்கலாம்."
"முதல் பாதி யப்பா முடியல டா சிரிச்சு சிரிச்சு செத்துட்டேன்...அண்மையில் நான் பார்த்த சிறந்த டார்க் காமெடி, மக்கள் செல்வன் பின்னிட்டாரு....."
"பிரவீன் விஜய் சேதுபதி கூட்டணி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பின் மீண்டும் கலக்கிவிட்டது. சிறப்பான திரைப்படம் இது. மகிழ்ச்சியாக பார்க்கலாம், இந்த கஞ்ச டானை மறக்கமுடியாது."
"கண்டிப்பாக மீண்டும் பார்க்கலாம். பணம், நேரம் செலவிட ஒர்த்தான படம். இந்த படத்தை விஜய் சேதுபதி தயாரிக்க முன்வந்ததில் ஆச்சரியம் இல்லை. கவலை எல்லாம் மறந்து சிரிக்கலாம்."
"கோகுலின் திரைக்கதை, டார்க் காமெடி ரசிக்கும்படி உள்ளது. விஜய் சேதுபதி, யோகிபாபு கூட்டணி தாறுமாறு.. சேது அண்ணா டயலாக் டெலிவரி அல்டிமேட். பாட்டி மற்றும் சரண்யா மேடம் செம. படத்தை பார்த்து சிரித்து மகிழுங்கள்."