திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தொடர்ந்து உற்சாகப்படுத்திய சிவகர்த்திகேயன்!" மேடையில் பாராட்டிய இயக்குனர்!
2015ஆம் ஆண்டு வெளிவந்த "இன்று நேற்று நாளை" திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தவர் ஆர். ரவிக்குமார். இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து "அயலான்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
முன்னதாக "அயலான்" திரைப்படம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் சில படங்கள் முழுமையடையாததால் பட வெளியீடு பொங்கலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் மற்றும் பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் சிவகார்த்திகேயன், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அதில் பேசிய ரவிக்குமார், சிவகார்த்திகேயனை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் ஆதரவு அதிகம் இருந்ததாகவும், அவர் எந்த இடத்திலும் தன்னை சந்தேகிக்கவில்லை என்றும், அவர் தொடர்ந்து தன்னை உற்சாகப்படுத்தியதாகவும் கூறிய ரவிக்குமார், சிவகார்த்திகேயன் எப்போதுமே தனக்கு ஸ்பெஷல் என்றும் கூறியுள்ளார்.