மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்டகாசமாக வெளியானது அயலான் படத்தின் அயலா அயலா பாடல்: லிங்க் உள்ளே.!
ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன் தொடர்பான கதை, நமது மக்களின் மனநிலைக்கேற்ப எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், டேவிட் ப்ரோட்டன்-டேவிஸ், பானுப்ரியா, பாலசரவணன், கோதண்டம், ராகுல் மாதவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் டிரைலர் காட்சிகள் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்றன. படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் அயலா அயலா பாடல் வெளியாகியுள்ளது.
விவேக்கின் பாடல் வரிகளில், நரேஷ் ஐயர், ஹிருதய் கட்டானி ஆகியோரின் பின்னணி குரலில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் இப்பாடல் உருவாகி இருக்கிறது. பாடல் வெளியன சிலமணி நேரத்திலேயே 2 இலட்சம் பார்வையாளர்களை கடந்து, யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.