திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இவ்ளோ கஷ்டங்களா.. 50 நாட்கள் ஷூட்டிங் முடிக்க 3 வருஷம் ஆச்சு.! நொந்து போன அயலான் இயக்குனர்!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார் மேலும் அவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். வேற்றுக்கிரக ஏலியன் நம்முடைய உலகிற்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை காமெடியாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஆர். ரவிக்குமார். அயலான் பட ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் அயலான் படம் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு அயலான் படப்பிடிப்புக்காக சென்றோம். முதல் 50 சதவீதம் நல்லபடியாக முடிந்தது. பின்பு நாங்கள் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. இந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஷூட்டிங்கை ஆரம்பித்தோம்.
2020 ஆம் ஆண்டு கொரோனா வருவதற்கு முன்பு கொஞ்ச நாள் சூட்டிங் நடைபெற்றது. பின்பு லாக்டவுன் போடப்பட்டது. பிறகு 2021 ஆம் ஆண்டுதான் படப்பிடிப்பை முடித்தோம். 50 நாட்கள் படப்பிடிப்பை எடுக்க மூன்று வருஷம் ஆகிவிட்டது என கூறியுள்ளார்.