மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் மோசடி செய்த விக்ரமன்.. விக்ரமனை சீண்டிய அசீம்.! வைரலாகும் பதிவு.?
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பலவிதமான விமர்சனங்களை பெற்று வெளியேறுவார்கள். அந்த வரிசையில் இருப்பவர்கள் தான் அசிம் மற்றும் விக்ரமன்.
இவர்கள் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டனர். போட்டியின் போது பல்வேறு கருத்து மோதல் ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். பிக் பாஸ் போட்டியின் போது விக்ரமனின் குணத்தை பாராட்டி பலர் நேர்மறையாக விமர்சித்தனர்.
விக்ரமனின் குணத்திற்காக ரசிகர் கூட்டம் பெருகி வந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் முதல் இடத்தை பிடித்தார் அசீம். இந்நிலையில் தற்போது விக்ரமன் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்ற பெண்ணை காதல் மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.
இது போன்ற நிலையில், அசீம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் "பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும். விதைத்த வினை எல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் என்றும், என் தத்துவம் ரீச்சாக கொஞ்சம் லேட் ஆகும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி விக்ரமனின் காதல் மோசடி சர்ச்சைக்காக தான் அசீம் பதிவிட்டு இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.