மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. அழகி பட நடிகையை ஞாபகம் இருக்கா.! இப்போ மகனுடன் எப்படியிருக்காரு பார்த்தீர்களா!! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் ’அழகி’. இந்த படத்தில் தனலட்சுமி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நந்திதா தாஸ். தொடர்ந்து அவர் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் நடித்திருந்தார். பின் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நீர்ப்பறவை என்ற படத்தில் வயதான ரோலில் நடித்திருந்தார்.
இவர் கடந்த ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். நந்திதா தாஸ் கடந்த 2002ம் ஆண்டு சௌமியா சென் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒருசில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் நந்திதா தாஸ் சுபோது மஸகாரா என்பவரை மறுமணம் செய்த நிலையில் அவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வார். அவ்வாறு அவர் தற்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் அழகிய பட நடிகையா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.