திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாட்ஷா இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த்-அஜித்குமார்?.. வைரலாகும் பேன் மேட் போஸ்டர்.!
கடந்த 1995ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா, ஜனகராஜ், தேவன், விஜயகுமார் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பாட்ஷா.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரீ-ரிலீசுக்கு செய்யப்பட்டது. அதேபோல, எச்.வினோத் இயக்கத்தில், அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம் மற்றும் ஆண்ட்ரியா தரியாங் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
இந்த இரண்டு படங்களும் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்தன. இரண்டு படத்தின் நாயகர்களான ரஜினிகாந்த் - அஜித் குமார் இணைந்து பாட்ஷா 2 படம் தயாராகினால் எப்படி இருக்கும் என ரசிகர் போஸ்டர் ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.