#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. குக் வித் கோமாளி பாபா பாஸ்கரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்துருக்கீங்களா!! வைரலாகும் அழகிய புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் திறமையை ஊக்குவித்தும், அதனையே அனைவரும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இதன் முதல் சீசனில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் அதில் நடிகை வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி 2வது சீசனில் நடிகை ஷகிலா, அஸ்வின், பவித்ரா லட்சுமி, பாபா பாஸ்கர் ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். மேலும் புகழ், பாலாஜி, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சரத் ஆகியோர் கோமாளிகளாக ரகளை செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் போலவே சேட்டைகள் செய்து மிகவும் உற்சாகத்துடன் வலம் வருபவர் பாபா பாஸ்கர். அவர் கோமாளிகளுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் அனைவரையும் சிரிக்க வைத்தது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்த நிலையில் பாபா பாஸ்கர் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.