#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாகுபலி பட நடிகர் வீட்டில் நேர்ந்த எதிர்பாராத பெரும்துயரம்.! கதறும் பிரபலம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
தெலுங்கு தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்களில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மது பிரகாஷ். இவர் பிரபாஸ் மற்றும் ராணா நடிப்பில் வெளிவந்த பாகுபலி படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவரது மனைவி பாரதி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மது பிரகாஷ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதாவது சூட்டிங் சென்றுவிட்டு, வீட்டிற்கு சரியாகவே வருவதில்லை என பாரதி மது பிரகாஷிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிய மது பிரகாஷிடம் இன்று ஷூட்டிங் முடிந்து சீக்கிரம் வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.
இதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்ட மதுபிரகாஷ் வெகுநேரம் கழித்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரது மனைவி படுக்கை அறையில் இருக்கும் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, கதறிய மது பிரகாஷ் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.