சமந்தா, ஸ்ருதிஹாசன் வரிசையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பாகுபலி நடிகை... மருத்துவமனையில் சிகிச்சை..!



bahubali-actress-affected-a-rare-disease

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா ஷெட்டி பல மொழி திரைபடங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். 2005 ஆம் ஆண்டு  நடித்த சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இந்த படம் இவருக்கு பெரிதளவில் வெற்றியை தரவில்லை.

அனுஷ்கா ஷெட்டி

மேலும் தெலுங்கில் பல படங்களில் நடித்த அனுஷ்கா ஷெட்டி தமிழில் சுந்தர்.சி இயக்கி மாதவன், ரீமாசென் நடித்த இரண்டு என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், வானம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் இவர் நடித்த அருந்ததி படத்திலிருந்து இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவாகியது. இப்படத்தில் நடித்ததற்காக அனுஷ்காவிற்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அதன் பின்பு இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடை கூட்டிய அனுஷ்கா உடல் எடையை குறைப்பதற்காக சிறிது காலம் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்துக் கொண்டுள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி

இத்தகைய நிலையில், தனக்கு அரிய வகை நோய் உள்ளது. சிரிக்க ஆரம்பித்தால் 10 முதல் 15நிமிடங்கள் வரை என்னால் சிரிப்பை நிறுத்த இயலாது. இதனால் பலமுறை படப்பிடிப்பை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.

இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று அனுஷ்காவே கூறியிருக்கிறார். சமந்தா, ஸ்ருதிஹாசன், பூனம் கவூர் போன்ற நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை நோய் போலவே இந்த வரிசையில் அனுஷ்காவும் சேர்ந்து கொண்டார்.