#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் ஒன்று சேர்ந்த பாக்யா மற்றும் கோபி..அதிர்ச்சியில் ராதிகா.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி' குடும்பப் பெண்களின் கதையையும், விவாகரத்தான பெண்களின் சவால்களையும் கூறுவது தான் பாக்கியலட்சுமி சீரியலின் கதை.
இந்த சீரியலில் கதாநாயகன் கோபி, பாக்கியலட்சுமியை விட்டு ராதிகா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு ராதிகாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த கோபி அங்குபடும் கஷ்டங்களையும், பாக்யாவின் வாழ்வில் நடக்கும் வளர்ச்சியையும், எதார்த்தமாக காட்டியிருக்கிறார்கள்.
அன்றாட குடும்ப நிகழ்வுகளை மக்கள் ரசிக்கும் விதமாக இந்த சீரியலில் காட்சிப்படுத்தப்பட்டதால் இந்த சீரியலை மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது போன்ற நிலையில், சமீபத்தில் வெளியான பாக்கியலட்சுமி சீரியல் புரமோவில் பாக்யா, கோபிக்கு காபி போட்டு கொடுக்கிறார். ஆனால் அங்கு ராதிகா இல்லை. இந்த புரமோ வெளியானதால் இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டனரா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.