#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய குக் வித் கோமாளி பிரபலம் பாலா.. வைரல் வீடியோ.!
திரைத்துறையில் மிகப்பெரும் பிரபலமாக உள்ளவர்களே கஷ்டப்படுபவருக்கு உதவி செய்ய யோசிக்கும் சூழ்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் பாலா பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
பிரபல தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி தொகுப்பாளராகவும், குக் விட் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும், கலக்கி வந்தவர் பாலா. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இது போன்ற நிலையில், இவர் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை மட்டும் அவருக்காக வைத்துக் கொண்டு மற்றவற்றை கஷ்டப்படுவோருக்கு உதவி செய்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வெளிவந்தன. இதன்படி இவர் சமீபத்தில் மலைவாழ் மக்களுக்காகவும், முதியோர் இல்லத்திற்காகவும் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார்.
இதையடுத்து தற்போது பாலாவின் மொபைலுக்கு ஒரு கால் வந்துள்ளது. அதில் ஒரு தாய் அவரது நோய்வாய்ப்பட்ட மகளிர்க்கு உதவும்படி கேட்டுள்ளார். மறு வார்த்தை எதுவும் பேசாமல் உடனடியாக அவருக்கு தேவையான ஒரு லட்சத்தை கொடுத்திருக்கிறார். மேலும் அவரது மகளிர்க்கு தேவையான பிசியோதெரபி செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பாலாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.