மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான பாலாஜி.! பெண் போட்டியாளருக்கு கொடுத்த அசத்தல் பரிசு! வைரலாகும் வீடியோ!!
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் தற்போது ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீ்ட்டிற்குள் உள்ளனர்.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சில காரணங்களால் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகவே தற்போது அவருக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது கடைசி வாரம் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதில் நேற்று ஷாரிக் மற்றும் அனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இன்று பாலாஜி மற்றும் அபிநய் ஆகியோர் வந்துள்ளனர்.
அவர்களை கண்டதும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் வீட்டிற்குள் நுழைந்த பாலாஜி
வெளியே ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும், தாமரைக்கு பரிசுப் பொருள் ஒன்றை வாங்கி வந்து கொடுத்துள்ளார். அதனைக் கண்டதும் தாமரை பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.