பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"இதுக்கு பிச்சை எடுக்கலாம்.. பிள்ளை பாக்கியமே இல்ல.. இது தேவையா?.. எல்லாரும் துப்புறாங்க" - நயனை வெளுக்கும் பயில்வான் ரங்கநாதன்.!!
ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகி பின்னாளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மிக முக்கிய தமிழ் நடிகையாக அடையாளம் காணப்பட்டவர் நயன்தாரா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, தற்போது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இவருக்கென உள்ள ரசிகர்கள் கூட்டம் ஏராளம் என்றும் கூறலாம். ஆனால் திரைத்துறையில் பல போராட்டங்களைக் கடந்து அவர் வெற்றியடைந்து இன்று லேடி சூப்பர்ஸ்டாராகவும் திகழ்கிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனை தொடர்ந்து அன்னபூரணி என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்த நிலையில், அது கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. இந்நிலையில் சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா உதவி செய்து அதை வீடியோவாகவும் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதனை விமர்சித்துள்ள பயில்வான் ரங்கநாதன் விளம்பரத்திற்காக நயன்தாரா நிவாரண செயலை செய்தார். அவர் தொடக்கத்தில் சிம்புவை காதலித்து அவரிடம் உள்ள பணத்தை பெற்று அவரை கழற்றிவிட்டார். பின் பிரபுதேவாவை காதலிக்கும் போது அவரது மனைவியிடம் வாங்கிய அடி நினைவில் இருக்கும்.
சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த பின்பு அவரின் வளர்ச்சியானது இமயமலை உயரம் சென்றது. நயன்தாரா பணவெறி பிடித்தவர். விக்னேஷ் சிவன், நயன்தாரா கூறும் அனைத்தையும் கேட்டு தலையாட்டும் நபராக இருந்து வருகிறார். அவர் வந்த நேரம் தான் அஜித் படமும் அவரின் கையை விட்டு சென்றது.
வெள்ளத்தால் மக்கம் பெரும் பாதிப்பை சந்திந்து வரும் நிலையில், நயன்தாரா உதவி செய்து வீடியோ வெளியிட எப்படி தான் மனது வந்ததோ?. இதற்கு பிச்சை எடுக்கலாம். இதெல்லாம் ஆண்டவனுக்கு கூட அடுக்காது. முன்னதாகவே ஆண்டவன் அவருக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கவில்லை.
அவரே தத்துப்பிள்ளை தான் வளர்த்து வருகிறார். உதவி செய்யும் இடத்தில் கூட அவருக்கு விளம்பரம் தான் முக்கியம். அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள் என விமர்சனம் செய்துள்ளார்.