#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. வேற லெவல் கொண்டாட்டமா இருக்கே! ஆர்ப்பரிக்கும் நடுகடலில் விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பீஸ்ட் ரிலீசுக்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.மேலும் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கிராமங்கள், நகர்ப்புறங்கள் எனப் பல பகுதிகளிலும் ரசிகர்கள் வித்தியாசமான புகைப்படங்களுடன் போஸ்டர்கள், விதவிதமான பேனர்கள் வைத்து கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு பின்புறம் 200 மீட்டர் தூரத்தில் கப்பல் துறைமுக போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டு இடிந்தநிலையில் இருக்கும் கடலின் நடுவே தெரியும் தூண்களில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் பட பேனரை கட்டியுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.