மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2023ல் வெளியான படங்களில், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற வில்லன்கள் யார்?.. விபரம் இதோ.!
2023-ம் ஆண்டு வெளியான பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் நடப்பாண்டில் அதிக வரவேற்பு பெற்றனர். பொதுவாக கதாநாயகன் மற்றும் கதாநாயகி கதாபாத்திரம் எப்போதும் இயல்பாகவே அதிக வரவேற்பு பெறும்.
அதனை தவிர்த்து பிற கதாபாத்திரங்களான நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் பெருமளவு மக்களால் விரும்பி வரவேற்கப்படுவது குறைவுதான். அவர்களின் படத்தின் மீதான தாக்கத்தை பொறுத்து மக்களிடம் வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில் நடப்பு ஆண்டில் வெளியான போர்த்தொழில் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் சரத்பாபுவை மக்கள் அதிகம் வரவேற்றனர். அதேபோல ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த விநாயகனும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார்.
மேலும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்த பகத் பாஸில், மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, மாவீரன் திரைப்படத்தில் நடித்த மிஸ்கின், பார்க்கிங் திரைப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் வில்லன்களில் வரவேற்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.