மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள் -வைரலாகும் வீடியோ!
தனது பாதுகாவலரை ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் சல்மான் கான்,அடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கான், கேத்ரினா கைப், தபு உட்பட பலர் நடித்துள்ள படம் பாரத்.அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ள இந்தப் படம், நேற்று ரிலீஸ் ஆனது. இந்திய அணி விளையாடிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இருந்தபோதும் பாரத் படத்தின் வசூல் குறையவில்லை. முதல் நாளில் 42.5 கோடி ருபாய் வசூலித்து சல்மான் கேரியரில் முதலிடம் பிடித்துள்ளது.
சல்மான் கானை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வெளியே திரண்டிருந்தனர். அவர்கள் சல்மானை புகைப்படம், வீடியோ எடுப்பதில் கவனம் செலுத்தினர். சில ரசிகர்கள் சல்மான் கானின் அருகில் செல்ல முயன்றனர். அவரது பாதுகாவலர்கள் தடுத்தனர்.
சில சிறுவர்கள் மற்றும் பெண்கள் அவர் அருகே வர முயன்றனர். சிலர் அவரிடம் ஏதோ கேட்டனர். அவர்களுக்கு சல்மான் பதில் சொன்னார். அப்போது, பாதுகாவலர் ஒருவர், ரசிகர்களை பிடித்துத் தள்ளினார். இதனால் ஆவேசமடைந்த சல்மான் கான், அந்த பாதுகாவலர் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதை எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சி அடைந்தார்.
Omg, @BeingSalmanKhan literally slapped a security guard for getting rough with a fan kid! #Bharat #SalmanKhan pic.twitter.com/05VFSRecmP
— 🎐 (@heartgetshurt) June 5, 2019