மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட..வேற லெவல்! நடிகர் பரத்தின் 50வது பட டைட்டிலை பார்த்தீர்களா!! வெளிவந்த அசத்தல் போஸ்டர்!!
தமிழ் சினிமாவில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிரபல நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் பரத். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பரத் விஷாலின் செல்லமே திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பின்னர் பரத் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான காதல் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. பிறகு ரசிகர்களிடையே பிரபலமடைந்த அவர் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பரத் தற்போது ஆர். பி. பாலா இயக்கத்தில் ”லவ்” என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் நடிக்கிறார். மேலும் ராதாரவி, விவேக் பிரசன்னா ,டேனியல் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ரோனி ரஃபேல் இசையமைக்க முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் 50-வது படமான இதற்கு லவ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல தெலுங்கு நடிகர் மோகன் லால் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
Here’s the first look poster of the Tamil movie 'Love'. Best wishes to R P Bala, Bharath and the team behind this film. pic.twitter.com/wzQWmD5MQU
— Mohanlal (@Mohanlal) April 21, 2022