பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#BharathiKannammaPromo: ஒருவழியாக உண்மையை அறிந்துகொண்ட பாரதி.. டி.என்.ஏ ரிசல்ட் சக்ஸஸ்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்?..!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வந்த தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், பாரதி தனது மகள்கள் தனக்கு தான் பிறந்தவர்கள் என்பதை டி.என்.ஏ டெஸ்ட் வாயிலாக ஒருவழியாக அறிந்துகொண்டுள்ளார்.
இதனால் தனது தவறை உணர்ந்துகொண்ட பாரதி, கண்ணம்மா உன்னை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்திவிட்டேன் என கண்ணீருடன் அழுது புலம்புகிறார். ஒருபக்கம் கண்ணம்மாவின் மகள் ஹேமாவை குடும்பமே தேடி வரும் நிலையில், மற்றொரு புறத்தில் பாரதிக்கு டி.என்.ஏ உண்மையும் தெரியவருகிறது.
ஆனால், அவருக்கு ஹேமா மாயமானது குறித்த தகவல் தெரியாது என்பதால், அதனை எப்படி அவர் தெரிந்துகொள்ளப்போகிறார்? எவ்வாறு தமிழகம் வந்து மகளை தேடப்போகிறார்? அல்லது ஹேமாவை கடத்தி செல்லும் கும்பல் டெல்லிக்கு அவரை அனுப்பிவைத்து பாரதியுடன் அவரை இணைக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.