ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நல்லவழி காட்டுங்கள்! நிறைய வயிறு பட்டினியில் கிடக்கு! தமிழக அரசுக்கு இயக்குனர் பாரதிராஜா விடுத்த கோரிக்கை!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது
இந்த நிலையில் திரைத்துறை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தர வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் பொது முடக்கம் தொடங்கி 150 நாட்கள் ஆகிவிட்டது. மேலும் திரையரங்குகளை மூடி, படப்பிடிப்புகளை நிறுத்தியும் 150 நாட்கள் ஆகிவிட்டது. 80 க்கும் மேற்பட்ட படங்கள் தேங்கிக் கிடக்கிறது. அரசின் வழிமுறைகளை பின்பற்றி எங்களது முடக்கத்தை முழுமையாகச் செய்துவிட்டோம்.
மேலும் படப்பிடிப்புகள் நடைபெறாத நிலையில் ஏராளமான ஏழை தினக் கூலி தொழிலாளர்களின்
வயிறு பட்டினியாக கிடக்கிறது. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பு அனுமதி வழங்கப்பட்டதை போல எங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். மேலும் கட்டுப்பாடுகளுடன் தந்தாலும் நிச்சயம் அதிலிருந்து மீறாமல், சீராக அவற்றைக் கடைப்பிடித்து, கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்போடு பணிசெய்வோம் என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.