ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் போஜ்பூரி பாடகி மீது துப்பாக்கிசூடு; மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.!



bhojpuri-singer-gun-fire-injury

 

பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டம், வந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் நிஷா உபாத்தியாய். இவர் போஜ்பூரி பாடகி ஆவார். 

அந்த ஊரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இவர் பாடல் பாடி வருகிறார். இந்நிலையில், பாட்னா நகரில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர் பாடல் பாடி இருக்கிறார். 

அப்போது பலரும் மேடை நோக்கி பணம் வீசி இருக்கின்றனர். அந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடத்தப்படவே, பாடகியின் இடது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

அவரை உடனடியாக மீட்ட விழாக்குழுவினர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.