#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கதாநாயகி ஆகும் ஆசையில் தீவிரமாக செயல்பட்டு வரும் பிக் பாஸ் லாஸ்லியா! அப்படி என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா என்பவர் கலந்து கொண்டார். அவர் வீட்டிற்கு நுழைந்த அடுத்த நாளே இவருக்கு ரசிகர்கள் ஆர்மி அமைக்க தொடங்கிவிட்டனர். அதன் மூலம் இவர் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தனது சொந்த நாடான இலங்கை சென்றார் லாஸ்லியா. இந்நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்ததை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் லாஸ்லியா.
இந்நிலையில் தற்போது கதாநாயகியாகும் ஆசையில் லாஸ்லியா மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதற்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சிகள் எல்லாம் மேற்கொண்டு வருகிறாராம்.
அதுமட்டுமின்றி இவர் வீட்டிற்குள் இருக்கும் போது கே. எஸ். ரவிக்குமார் இவரிடம் திரையுலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே கூடிய விரைவில் இவர் சினிமாவில் ஹுரோயினாக நடிக்க இருப்பதாக தெரிகிறது.