மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் தர்ஷனுக்கு இப்படி ஒரு நீண்ட நாள் ஆசை இருந்ததா! வைரலாகும் புகைப்படம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். இவர் அடிப்படையில் மாடலிங்காக பணியாற்றியுள்ளார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர். இவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வருவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறியது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் முகேன் வெற்றி பெற்றதும் ஓரளவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது தர்ஷன் அவர்கள் பல படங்களின் கதையை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் தர்ஷனை திரையில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் நான் நடிகர் அதர்வாவை போல இருப்பதாக பலர் கூறியுள்ளனர். அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் அதுவே எனது நீண்ட நாள் ஆசை என கூறியிருந்தார்.
தற்போது தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அதாவது பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அதர்வாவை சந்தித்த தர்ஷன் அவருடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.