மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இருபது வருடக் கனவு விடாமுயற்சியால் நிறைவேறியது!" பிக்பாஸ் பிரபலம் நெகிழ்ச்சி!
2016ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த "சைத்தான்" படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஆரவ். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பிக் பாஸ் சீசன் 1" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிக் பாஸ் பட்டத்தை வென்றார் ஆரவ்.
முன்னதாக மணிரத்னம் இயக்கிய "ஓ காதல் கண்மணி" படத்தில் ஒரு சிறிய துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து 2017ம் ஆண்டு "வா அருகில் வா" என்ற திகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் "ஒரு கோப்பை காபி" என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.
இதையடுத்து மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ், கலகத்தலைவன், மாருதி நகர் காவல்நிலையம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தில் தானும் நடிப்பதாக ஆரவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அஜித்துடன் அசர்பைஜான் நாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட ஆரவ், "20 வருடங்களாக இந்த தருணத்திற்காகத் தான் காத்திருந்தேன். விடாமுயற்சி என்றும் தோற்காது" என்று குறிப்பிட்டுள்ளார் ஆரவ்.