மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பிக்பாஸில் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" ஐஸ்வர்யாவின் உருக்கமான பதிவு..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது தனி திறமைகளை நிரூபித்து மக்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றனர்.
ஆறு சீசன்களை தாண்டி ஏழாவது சீசனாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் ஐஷு என்பவர். இவரின் விளையாட்டு ஆரம்பத்தில் மக்களை கவர்ந்தாலும் சில நாட்களுக்குப் பிறகு முகம் சுளிக்கும் விதமாக பல செயல்களை செய்து வந்தார்.
இதனால் குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வெளியேறி சில நாட்களை கடந்த பின்னரும் எந்த ஒரு பதிவுகளையும் பதிவிடாமல் இருந்தார். இதனை அடுத்து தற்போது ஐஷு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐஸு கூறியதாவது, "என்னை நம்பியவர்களை நான் ஏமாற்றி விட்டேன். என்னிடமிருந்து எப்படி இருக்கக் கூடாது என்பதை பலர் கற்றுக் கொள்வதற்கு முன் உதாரணமாக இருப்பது எனக்கு கேவலமாக உள்ளது. என் தவறான போக்கை திருத்த முயன்ற விசித்ரா, அர்ச்சனா, யுகேந்திரன், தினேஷ், பிரதீப் போன்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.