மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னோட ஹீரோ.. அந்த பிரபல நடிகருடன் காதலை உறுதி செய்தாரா பிக்பாஸ் அர்ச்சனா.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான சவால்களை சந்தித்து, சிறப்பாக விளையாடி டைட்டில் வின்னரானவர் அர்ச்சனா. இதற்கு முன்பு அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி 2 தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.
அதனைத் தொடர்ந்து அவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அர்ச்சனா விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அருண் பிரசாத்தை காதலிப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் அருண்பிரசாத் போட்டோ ஷூட் நடத்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அர்ச்சனா 'என் ஹீரோவை புகைப்படம் எடுத்ததற்கு நன்றி’ என போட்டோகிராபருக்கு நன்றி கூறி கமெண்ட் செய்துள்ளார். இந்த நிலையில் இருவரும் காதலிப்பது உறுதியாகிவிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் இருவரும் இணைந்து மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடிக்கிறார்கள், அதனை குறிப்பிட்டே அர்ச்சனா அவ்வாறு கமெண்ட் செய்ததாகவும் சிலர் கூறி வருகின்றனர். இதுகுறித்து இருவரும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.