96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
விறுவிறுப்பான புதிய டாஸ்க்! போட்டியாளர்களுக்கிடையே வெடித்த மோதல்! சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். பின்னர் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் துவக்கத்திலேயே ஓபன் நாமினேஷன் நடைபெற்றது, இதில் ஆரி, ரியோ, அர்ச்சனா, ஷிவானி, ஆஜித், அனிதா, சோம் நாமினேட் ஆன நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் அனிதா, ஆரி, கேப்ரில்லா, ஷிவானிஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நாளிற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் 2 அணிகளாக பிரிந்து விளையாடக்கூடிய பால் கேட்ச் என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த டாஸ்கின் போது போட்டியாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆரி மற்றும் ரியோ இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.