#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ரேகா செய்த நெகிழ்ச்சி காரியம்! வைரலாகும் யாரும் காணாத அரிய வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இதில் மக்களுக்கு நன்கு அறிமுகமான மிகவும் விருப்பமான பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சில புதுமுகங்களும் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு 16 போட்டியாளர்களுள் ஒருவராக பிரபல முன்னணி நடிகை ரேகா கலந்துகொண்டுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் கண்டிப்புடன் இருக்கும் அவர் சக போட்டியாளர்களுடன் அன்பாகவும் பழகி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் அனைவரும் மறைந்த பாடகர் எஸ்பிபிக்காக இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அப்போது பேசிய நடிகை ரேகா நான் எஸ்பிபி அவர்களுடன் பாலைவன ராகங்கள், குணா, சிகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். அவரது இசையில் அவருக்கு மனைவியாக நடித்தது நான் செய்த பெரும் பாக்கியம். ஒட்டுமொத்த தமிழ்நாடே அவரை இழந்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என வேதனையுடன் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் எஸ்பிபி பாடிய பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். அவரைத் தொடர்ந்து மற்ற போட்டியாளர்களும் எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.