மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. இவரா? பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா?? கசிந்த தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் பஞ்சமில்லாமல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 18 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
அதாவது இரண்டாவது வாரத்திலேயே ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்றிருந்த ஜி.பி முத்து தனது பிள்ளைகளை காண வேண்டும் என தாமாகவே வீட்டிலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சாந்தி மற்றும் அசல் கோலார் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று அடுத்தடுத்த வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றபட்டனர். பிக்பாஸ் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான, கடினமான டாஸ்க்குகளை கொடுத்து நிகழ்ச்சி மீது சுவாரசியத்தை கூட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இந்த வாரம் விக்ரமன், அசீம், கதிர் மற்றும் ஷெரினா ஆகியோர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஷெரீனாவே குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.