#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவது இவர்தானா! லீக்கான தகவல்!
பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அன்பு, மோதல், வாக்குவாதங்கள் என பரபரப்பாகவும் ரணகளமாகவும் சென்று கொண்டுள்ளது. இதில் போட்டியாளராக கலந்து கொண்ட திருநங்கையான நமீதா சில நாட்களிலேயே தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து கடந்த வாரம் நாடியா சாங் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் ஏராளமான டாஸ்க்குகள் போட்டியாளர்களின் சுயரூபங்களை வெளிகொண்டுவந்துள்ளது. இந்த வாரம் நாமினேஷனில் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்னப் பொண்ணு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வார இறுதியான நேற்று வருகை தந்திருந்த கமல் விதிகளை மீறிய போட்டியாளர்களை வறுத்தெடுத்தார். பின்னர் நாமினேட்டான 9 போட்டியாளர்களில் தாமரை, இசைவாணி, பாவணி மற்றும் அக்ஷரா ஆகியோர் காப்பாற்றபட்டதாகவும் அவர் அறிவித்தார். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் அபிஷேக் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் பரவி வருகிறது.