96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்களின் சந்திப்பு! அவர்கள் மட்டும் வராதது ஏன்? வைரலாகும் நடிகை ரேகாவின் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
மேலும் கடந்த வாரம் ரம்யா, நிஷா, ஷிவானி, கேபிரில்லா, ரமேஷ், சோம் என 6 பேர் நாமினேஷனில் இடம்பெற்ற நிலையில், கமல் இந்த வாரம் இரண்டு எவிக்சன் என அறிவித்தார். அதனை தொடர்ந்து சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் மற்றும் அவரை தொடர்ந்து மறுநாள் நிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் சமீபத்தில் சந்தித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் வீடியோ பதிவிட்டிருக்கும் நடிகை ரேகா, ஜித்தன் ரமேஷூம், நிஷாவும் இப்போதுவெளியே வந்திருக்கிறார்கள். சுசித்ரா பிஸியாக இருக்கிறார். சனம் ஷெட்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் தான் எங்களுக்குள் போட்டி. வெளியே நாங்கள் நண்பர்கள்தான். அடிக்கடி இப்படி சந்திக்க ஆசைப்படுகிறோம் என கூறியுள்ளார்.