#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"பிக்பாஸ் பிரபலத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம்" வீடியோ வைரல்.!
சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி ஷிவின் கணேசன். இவர் ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2022ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தார். இவரின் மூலம் திருநங்கைகளின் மீதான மதிப்பு அனைவருக்கும் உயர்ந்துள்ளது.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் ரட்சிதா மஹாலக்ஷ்மி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரும் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டார். தன் வசீகரமான முகத்தோற்றத்தால் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
ஷிவின் மற்றும் ரட்சிதாவின் அழகான நட்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது மக்கள் அனைவரையும் கவர்ந்தனர். ஷிவினை தனது தங்கை என்று கூறும் ரட்சிதா, பிக் பாஸ் வீட்டிலிருந்து ஷிவின் வெளியேறியபோது, மிகபெரிய ஊர்வலம் நடத்தியது கவனம் பெற்றது.
தற்போது நேற்று ரட்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என் பாப்பாவின் பிறந்தநாள்" என்ற கேப்ஷனுடன் ஷிவினின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்களது நட்பைக் கண்டு வியந்து வருகின்றனர்.