96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடடே நம்ம பிக்பாஸ் ஐக்கி பெர்ரியா இது? வைரலாகும் இன்ஸ்டாக்ராம் போட்டோ!
ஐக்கி பெர்ரி பிரபல ராப் பாடகர் ஆவார். இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்றார். அதன்மூலம் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். மக்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் சென்ற போட்டியாளர்களில் இவரும் முக்கியமான ஒருவர் ஆவார்.
ஐக்கி பெர்ரி ராப் பாடகர் மட்டுமல்ல இவர் ஒரு பாடலாசிரியர், மாடல் மற்றும் டான்சரும் ஆவார். மற்றும் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் இவர் ஒரு மருத்துவரும் கூட. இவர் தோற்றத்தை கண்டு அனைவரும் இவரை வெளிநாட்டவர் என நினைத்தனர். ஆனால் இவரோ நம்ம தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த தமிழ்பெண் ஆவார்.
இவர் ஆரம்பகால கட்டத்தில் காதல் தோல்வியால் துவண்டு போயிருந்தார். பின் தனது விடா முயற்சியால் அதிலிருந்து மீண்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் தனது குடும்பத்தினரின் ஆதரவும் எதுவும் இல்லாமல் தானே தனது முயற்சியாலும் கடும் உழைப்பாலும் முன்னேறினார்.
சமூக வளைதளங்களில் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் ஐக்கி பெர்ரி தற்பொழுது இன்ஸ்டாக்ராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இப்பொழுது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.