#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட்வகேட்டாக மாறிய பிக் பாஸ் ஜூலி... ரசிகர்கள் வியப்பு.!
2017 ஆம் வருடம் ஜனவரி மாதம் நடந்த ஜல்லிகட்டு போராட்டத்தின் போது 'சின்னம்மா சின்னம்மா ஒ.பி. எஸ் எங்கம்மா' போன்ற டயலாக்குகள் பேசி பிரபலமான நபர் ஜூலி. பின்பு அதே வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் ஜூலி மரியானா.
மக்கள் மத்தியில் பிக் பாஸ் மூலம் அதிகமாக விமர்சிக்கப்பட்ட சிலரில் ஜூலியும் ஒருவர். பிக் பாஸில் இருந்து வெளிவந்த பிறகு பல சர்ச்சைகளில் தானாகவே சிக்கிக் கொண்டார். மக்கள் இவரை அதிகமாக விமர்சித்தாலும் அதை பாசிட்டிவாகவே எடுத்துக் கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சிறிது காலம் மாடலாக பணியாற்றிய ஜூலி அதன்பின் அம்மன் தாயே என்ற படத்தில் கதாநாயகியாகவும், மன்னர் வகையறா, நான் சிரித்தால் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார்.
இத்தகைய நிலையில், மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் அட்வகேட் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், இவர் தனது காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் காவல் நிலையம் வரை சென்று காதலன் மேல் புகார் கொடுத்தார். இது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.