திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நீங்க மட்டும் சின்ன பொண்ணா இருந்திருந்தா.. வனிதாவிடம் அத்துமீறிய பிக்பாஸ் பிரதீப்.!
விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இதில் பங்கேற்றுள்ளவர் தான் பிரதீப். இவர் இதற்கு முன்பு சீசன் மூன்றில் பங்கேற்ற கவினின் நண்பர் என்று பலருக்கும் தெரியும்.
அப்போது பிரதீப், கவினை பார்ப்பதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தது, கவினை கன்னத்தில் அறைந்தது எல்லாம் மறக்க முடியாத நிகழ்வாக ரசிகர்கள் மனதில் இப்போதும் இருக்கும். அந்த சமயத்தில் அவர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, பிரதீப் வனிதாவிடம் பேசுவார்.
அப்போது பிரதீப் வனிதாவிடம், "நீங்கள் மட்டும் திருமணமாகாத சின்ன பெண்ணாக இருந்தால், நானே உங்களை காதலித்து திருமணம் செய்திருப்பேன்" என்று கூறுகிறார். அதற்கு ஷெரின், "இப்போதும் வனிதா சிங்கிள் தான். எப்போதும் வனிதா சின்ன பெண் தான்" என்று கூறுவார்.
அதற்கு பதிலளித்த பிரதீப் "நான் இதை யோசிக்கிறேன்" என்று கூறுகிறார். பல வருடங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் நடந்த இந்த சம்பவம் , தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த வனிதாவும், இப்போது அதற்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.