மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் சாண்டி வீட்டில் விசேஷம்! செம கியூட்டாக லாலா பாப்பா என்ன பண்ணிருக்காங்க பார்த்தீங்களா! வாழ்த்தும் ரசிகர்கள்!!
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி, தனது திறமையால் ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் சாண்டி. அதனைத் தொடர்ந்து அவர் சினிமாக்களிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வெற்றி பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவர் பாய்ஸ் குரூப் என்ற பெயரில் சக போட்டியாளர்களுடன் சேர்ந்து அடித்த அரட்டைகள் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டது. சாண்டியின் மனைவி சில்வியா. அவர்களுக்கு லாலா என்ற மகள் உள்ளார்.
இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தனர். இந்த நிலையில் சாண்டியின் மனைவி சில்வியா தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில்வியாவுக்கு அண்மையில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அப்பொழுது சாண்டி மற்றும் லாலா சில்வியாவிற்கு வளையல் போட்டு மகிழ்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.