பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கோபத்தில் எகிறி வந்த ரேகா! பொறுமையிழந்து தலையில் அடித்துகொண்ட நடிகை சனம் ஷெட்டி! வைரலாகும் ரணகள வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது.
மேலும் நாள்தோறும் உற்சாகங்களும், மோதல்களும் சூடுபிடித்து வருகிறது. அதுமட்டுமின்றி மிகவும் சாந்தமாக இருந்த பலரும் தற்போது கோபப்பட்டு பிக்பாஸ் வீட்டையே ரணகளமாக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
#Day5 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/VHVpfGC07d
— Vijay Television (@vijaytelevision) October 9, 2020
அதாவது சமையலில் ஏதோ பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அதுகுறித்து சனம் ஷெட்டி, ரேகாவிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் இருவருமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ரேகா பயங்கர கோபமடைய ரம்யா பாண்டியன் சமாதானம் செய்ய முயல்கிறார். ஆனால் பலனில்லாத நிலையில் சனம் ஷெட்டி பொறுமையை இழந்து தனது தலையில் அடித்துக்கொண்டுள்ளார். இந்தப் ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.