96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பைனலுக்கு செல்ல பிக்பாஸ் கொடுத்த வெறித்தனமான டாஸ்க்! முன்னணியில் இருப்பது இவரா? வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி ஜனவரி மாதம் முடிவுக்கு வர உள்ளது. பிக்பாஸ் வீட்டில் ராஜு, பிரியங்கா, தாமரை, பாவனி, நிரூப், சிபி,சஞ்சீவ், அமீர் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது Ticket To Finalலுக்காக போட்டியாளர்களுக்கு நிறைய டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனை போட்டியாளர்கள் வெறித்தனமாக செய்து வருகின்றனர். மேலும் இதனால் பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதங்கள், மோதல்களும் வெடித்தது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், இன்று நடந்த டாஸ்க்கில் சஞ்சீவ் முன்னேறி வருகிறார். ஆனால் அவர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று காப்பாற்றப்படுவாரா அல்லது எலிமினேஷன் ஆவாரா? என பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.