96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அதான்டா உன் வேலையே.. கொந்தளித்த ஜோவிகா! வேற லெவலில் அனல் பறக்கும் பிக்பாஸ் வீடு! வைரல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இரு வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பூர்ணிமா ரவி, ரவீனா, பிரதீப் ஆண்டனி, வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா, ஜோவிகா, ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், நிக்சன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா, விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில் கடந்த வாரம் அனன்யா நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பவா செல்லத்துரை உடல் நலக்குறைவால் தானாகவே வெளியேறினார். இந்த வாரம் கேப்டனாக சரவணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், ஐஷு, மாயா, பிரதீப், விஜய் வர்மா ஆகியோர் ஸ்மால் ஹவுஸ் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று நிகழ்ச்சியில் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் சமைக்க முடியாது என கூறிய நிலையில் பிரதீப் மற்றும் ஜோவிகாவிற்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அனல் பறக்கும் ப்ரமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.