96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கொளுத்தி போட்ட பிக்பாஸ்.! தினேஷ்- விஷ்ணுக்கு இடையே வெடித்த மோதல்!! அனல் பறக்கும் வீடியோ!!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சண்டை சச்சரவுடன் அனல் பறக்க சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பாவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 8 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வார தலைவராக தினேஷ் உள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்க் ஒன்றை தினேஷ்க்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் அதனை அவர் ஆரம்பித்த நிலையில் அவருக்கும் போட்டியாளரான விஷ்ணுவுக்கும் இடையே கடுமையான மோதல் துவங்கியுள்ளது. அப்பொழுது தினேஷ் விஷ்ணுவை பார்த்து ‘ப்ரோமோ பொறுக்கி’ என கூற டென்ஷனான விஷ்ணு" பொறுக்கி கிறுக்கின்னு சொன்ன வேற மாதிரி ஆகிடுவ மிரட்டுகிறார்.
ஆனால் மீண்டும் தினேஷ் அதையே சொல்ல விஷ்ணு கோபத்தில் அருகில் இருந்த சோபாவை எட்டி உடைத்து அது போலதான் உனக்கும் நடக்கும் என கத்துகிறார். இந்த ப்ரமோ வைரலாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.