கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பிக்பாஸ் வீட்டில் எதுக்கு இவங்க?? வனிதா செய்த காரியம்! கடுப்பாகி கத்திய அனிதா! பரபரப்பு வீடியோ!!
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டை, மோதல் என பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.இதில் பிக்பாஸ் ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட பிரபலங்கள் சிலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் உடல்நலம், அரசியல் மற்றும் படப்பிடிப்பின் காரணமாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வனிதா எந்த வேலையும் செய்யாமல் இருக்க, டென்ஷனான அனிதா தாமரையிடம் டாஸ்க் எதையும் செய்வதில்லை, வேலையும் செய்வதில்லை என்றால் பிக்பாஸ் வீட்டில் அவர்கள் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவருக்கு வேலை கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.