கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கால்ல போட்டிருப்பதை கழட்டி அடிக்க சொல்லுங்க.! அனல் பறக்கும் பிக்பாஸ் வீடு!! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும், நாளுக்கு நாள் சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சண்டை, அன்பு, மோதல், சச்சரவு என எதற்கும் பஞ்சம் இல்லாமல் பரபரப்புடன் உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துக்கொண்ட பிரபலங்களே போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆன சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியின் மூலம் களமிறங்கியுள்ளார்.
அவர் வெளியே நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்த நிலையில் போட்டியாளர்களிடம் சில விஷயங்கள் குறித்து கூறியுள்ளார். இந்த நிலையில் அனிதா இதுகுறித்து கோபப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து டென்ஷனான சுரேஷ் சக்ரவர்த்தி இனிமேல் அவரிடம் பேசினால் அவங்க காலில் போட்டிருப்பதை கழட்டி அடிக்க சொல்லுங்கள் என ஆவேசமாக பேசியுள்ளார். அந்த ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது.