மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சூப்பர்ஸ்டாருடன் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரியுமா?" பிரபல பிக் பாஸ் போட்டியாளர் இவர்!
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் விசித்ரா. 1991ம் ஆண்டு "போர்க்கொடி" என்ற படத்தில் தான் அறிமுகமானார். அந்தப் படம் இன்றுவரை வெளியாகவில்லை.
தொடர்ந்து தலைவாசல், தேவர் மகன், ஜாதிமல்லி, வண்டிச்சோலை சின்ராசு, அமைதிப்படை, முத்து, அசுரன், சீதனம், பெரிய குடும்பம், தொட்டாசிணுங்கி, சிஷ்யா, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், சுயம்வரம், ஜெயம், பொண்ணு வீட்டுக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் வாழ்க்கை, மாமி சின்ன மாமி, ராசாத்தி உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் விசித்ரா.
இந்நிலையில் தற்போது விசித்ரா நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட சிறு வயதுப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் முத்து படத்தில் நடித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது என்றும் தெரிய வந்துள்ளது.